Posts

Showing posts from September, 2020

‘கபடதாரி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது

Image
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘கபடதாரி’ படத்தின் முழு  படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கபடதாரி’. இவர் வெளியிடும் மற்றும் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதால், ‘கபடதாரி’ படத்திற்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு முடிவடையாமல் இருந்தது. தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததையடுத்து, ’கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு, கடந்த 3 நாட்களில் சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது. அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றியும், 70-க்கும் குறைவான நபர்களை கொண்டும் இந்த மூன்று நாட்கள் படப்பிடிப்பையும் ‘கபடதாரி’ படக்குழு நடத்தி முடித்துள்ளார்கள். இதில் கதாநாயக...

“பாவ கதைகள்”( Netflix ) நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம் !

Image
தமிழ் சினிமாவின் தரத்தை உலகளவில் உயர்த்தி பிடித்த நான்கு இயக்குநர்களான கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை தமிழின் பெரு நட்சத்திரங்களின் நடிப்பில் நெட்ஃப்ளிக்ஸ்க்காக உருவாக்கியுள்ளார்கள். மும்பை 2020 அக்டோபர் 1 நெட்ஃப்ளிக்ஸ் ( Netflix ) நிறுவனம் தங்களது முதல் தமிழ் திரைப்படமான “பாவ கதைகள்” திரைப்படத்தை இன்று அறுவித்துள்ளார்கள். கௌதம் மேனன், சுதா கொங்குரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார்கள். பாவ கதைகள் காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான...

தீர்ப்பு என்பதை விட தீர்மானிப்பு என்பதே சரி-தொல். திருமாவளவன் கருத்து..

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல உள்ளதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். 1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட 32 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லாததால் 32 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் ' ஏற்கனவே தீர்மானித்ததையே தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்னும் சந்தேகம் எழுகிறது. இது தீர்ப்பு என்பதைவிட தீர்மானிப்பு என்பதே சரி. பாபர்மசூதியை இடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நிராபராதிகளென அவர்களை விடுதலைசெய்த சிபிஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சி - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை துவங்கியிருக்கிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அணியும் கவச உடையை அமைச்சர் விஜயபாஸ்கர் அணிந்து இருந்தார்.  பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-  மருத்துவர்கள் கவச உடை அணிவதன் சிரமத்தை இன்று நான் உணர்ந்துகொண்டேன்.  கவச உடை அணிந்து பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு தலைவணங்குகிறேன்.   நோய் தொற்றின் வேகத்தை ஓரிரு நாட்களில் கணிக்க முடியாது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை துவங்கியிருக்கிறோம்.  என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இந்த சந்திப்பின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் உடன் இருந்தார்

நிசப்தம் திரைப்படத்தில் ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இடையிலான பொருத்தத்தைப் பாராட்டும் இயக்குனர் ஹேமந்த் மதுகர்

Image
ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோரை நீண்ட காலத்திற்குப் பிறகு ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு-தமிழ் த்ரில்லர் நிசப்தம்மில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு தமிழ்படம் ரெண்டுவில் இணைந்து நடித்த இவர்கள், மீண்டும் இணை சேர்ந்துள்ளனர். ஒரு வெளிப்படையான உரையாடலில், இயக்குனர் ஹேமந்த் மதுகர், படத்தில் அனுஷ்கா மற்றும் மாதவன் மீண்டும் இணைவது பார்வையாளர்களுக்கு இந்த த்ரில்லரைப் பார்ப்பதன் ஒரு கூடுதல் போனஸாகத் திகழும் என்பதை வெளிப்படுத்தினார். அவர், “ஆரம்பத்தில், அவர்கள் முன்பு ஒரு படம் செய்தார்கள், 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு ஊமையாக இருக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தையும், இசைக்கலைஞராக நடிக்கும் மாதவனின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான உற்சாகத்தைப் பார்த்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒருவர் அழகானவர், மற்றவர் கியூட்டானவர், ஒன்றாக அவர்களது பல்திறன் நடிப்பும் இணைய, அவர்களிடையே திரையில் காணப்பட்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

Image
தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த செப்.28ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் இரு அணிகளும் காரசார முழக்கங்களை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு வருகிற அக்.7ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து அதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்து சற்றே சலசலப்பை ஓயச்செய்தார். ஆனால் மறுநாளே ஓபிஎஸ் இல்லத்தில் கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் இபிஎஸ்-ஐயும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என இருதரப்பில் இருந்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், தமிழக முதல்வர் நடத்திய மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் புறக்கணித்தது இவர்களுக்கிடையே மீண்டும் புகைச்சலை எழுப்பியுள...

‘BORN IN BHARAT’ – Pride of the PAST, Growth for the PRESENT,and Vision for the FUTURE!

  ~ More than 4000 professionals and enthusiastson a collective effort towards ‘Nation Building’ Conceptualised and carefully curated by Seshu Karthik - an Entrepreneur by heart, the campaign revolves around building a better Nation for tomorrow with a collective effort from each one of us. ‘BORN IN BHARAT’ started as a single idea of bringing people together for the Nationand evolved into a broader holistic initiative considering the past, present, and future. It aims to function in three stages - take pride of the past glories of the country, drive growth for today’s progress, and create a vision for a stronger tomorrow. Launched on 14 th September 2020. The campaign instantly caught the eyes of the citizens and earned more than 3500 tweets on the launch day. It was national trending on Twitter for 3-4 hours. It has taken the approach to Empower Individuals to build an Empowered Nation. ‘BORN IN BHARAT’ was launched in association with Bhumi Organization and Young Indians Chenn...

எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ - நடிகர் ராதாரவி

Image
எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ! நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம்! டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது. மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.

அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி ரிலீஸ்

Image
வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் ,  இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்- 19  ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட  ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள அமேசான் ஒரிஜினல் திரைப்படமான  புத்தம் புது காலை படத்தை அமேசான் அறிவித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது. அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள் ,  டிவி நிகழ்ச்சிகள் ,  ஸ்டாண்ட்-அப் காமெடிகள் ,  அமேசான் ஒரிஜினல்ஸ் ,  அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை ,  இந்தியா முழுவதும்   தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி ,  டாப்டீல்களை உடனடியாக பெறுதல் ,  பிரைம் ரீடிங்கில்   வரம்ப...

உலகளவில் தமிழருக்கு கிடைத்த உயர்ந்த அங்கீகாரம். சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக தமிழர் ஹரிஹர அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்

Image
உலகளவில் தமிழர்கள் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார்கள். உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தும் பல உயர்ந்த நிறுவனங்களில் நம் தமிழர்கள் தான் உயர் பதவியை அலங்கரிக்கிறார்கள். உலகம் முழுக்க பல முக்கிய நிறுவனங்களிலும், அரசு பதவிகளிலும் கூட தமிழர்கள் தான் தலைமையை அலங்கரிக்கிறார்கள். அமெரிக்க துணை ஜனாதிபதிக்கே நம் தமிழர் ஒருவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தமிழருக்கு மேலும் ஒரு பெரும் அங்கீகாரமாக சர்வேதச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நம் தமிழர் ஹரிஹர அருண் சோமசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.  உலக நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஐநா சபை சார்பாக, உலக நாடுகளுக்கென்று பொதுவாக சர்வதேச நீதிமன்றம் செயல்படுகிறது. நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் இருந்து இந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நீதிமன்றத்தில் உலக நாடுகளுக்கு பொதுவான சட்ட ஆலோசனைகள் வழங்கவும், மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஐந்து பேர் அடங்கிய, சட்ட வல்லுநர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் ஒருவராக, நம் தமிழகத்தை சேர்ந்த,  சர்வதேச வழக்கறிஞராக இயங்கி வரும், ஹரிஹர அருண் சோமசங்...

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,546 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,91,943 பேராக உயர்வு. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 84,163 பேருக்கும், இதுவரை 70,50,820 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 70 பேர் உள்பட, மொத்தம் 9,453 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் இன்று 5,501 பேர் உள்பட, இதுவரை 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர்; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,281 இதுவரை, தமிழகத்தில் 90.58 % குணமடைந்துள்ளனர். சென்னையில் 1,277 பேர் உள்பட மொத்தம் 1,66,029 பேர் பாதிப்பு; தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,193. - தமிழக சுகாதாரத்துறை.

தமிழகத்தில் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசாணை நிறுத்திவைப்பு திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு 100 பேர் வரை அனுமதி புறநகர்ப் மின்சார ரயில் போக்குவரத்திற்க்கான தடை தொடரும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது  கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும் அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை நீட்டிப்பு உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி உணவகங்களில் பார்சல் சேவைக்கு இரவு 10 மணி வரை அனுமதி சென்னை விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்க அனுமதி தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது - தமிழக அரசு

நடிகர் சுசாந்த் சிங் மரணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் நிபுணர் குழு சிபிஐயிடம் தாக்கல்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் நிபுணர் குழு, சிபியையிடம் வழங்கியது.  சுசாந்தின் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 40 நாட்களில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஐ யின் வேண்டுகோளின் படி டாக்டர் சுதிர் குப்தாவின் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர், சுசாந்தின் உடற்கூறு மற்றும் குடல் பரிசோதனை அறிக்கைகளை மறுஆய்வு செய்தனர். சுசாந்தின் குடலில் விஷம் காணப்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக வைத்து வழக்கை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

திரையரங்கிற்காக நடித்த படங்கள் ஓடிடியில் வெளியாகும் போது முதல் கொஞ்சம் வருத்தம், பயம் இருந்தது - மாதவன்

Image
ஹேமந்த் மதுகர் இயக்குநர் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிசப்தம்’. அக்டோபர் 2-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து மாதவன் அளித்துள்ள பேட்டி: 14 ஆண்டுகள் கழித்து அனுஷ்காவுடன் நடித்த அனுபவம்? ‘இரண்டு’ படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார் அனுஷ்கா. சினிமாவுக்கு புதுசு. 14 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால், அதே அழகு தான். சினிமா மீது அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா என்று கேட்டுத் தெரிந்துக் கொள்வதை எல்லாம் பார்த்த போது ரொம்பவே பெருமைப்பட்டேன். ரொம்ப அற்புதமான நடிகையாகிவிட்டார். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு பெரிய நடிகையாகிவிட்டார். எந்த பந்தாவும் இல்லாமல் இருக்கிறார். ‘நிசப்தம்’ அனுபவங்கள்? இந்தக் கதை என்னிடம் வரும் போது முதலில் வசனங்களே இல்லாத ஒரு படமாக வந்தது. த்ரில்லராக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சம் வசனங்கள் வைக்கலாம் என்று சேர்த்தோம். அதுவும் கொஞ்ச வசனங்களே இருக்கும். சலோ ப்ளேயராக நடித்துள்ளேன். அதற்காக சலோ கற்றுக் கொண்டேன். அதை வாசிக்க இல்லாமல், சரியாக நடிக்க கற்றுக் கொண்டேன். உ...

புதுமுகங்களின் அணிவகுப்பில் உருவாகி இருக்கும் குற்றப் பின்னணி கொண்ட பழிவாங்கும் கதை "பிறர் தர வாரா "

Image
சிட்டியில் குழந்தைகள் கடத்தல் தீவிரமாகிறது. குழந்தைகளை கடத்துவது யார்? இதன் பின்னனியில் யார் இருக்கிறார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்ய ஸ்பெஷல் ஆபிசரை நியமிக்கிறார் கமிஷனர் . ஸ்பெஷல் ஆபிசர் துப்பு துலக்குகிறார். இதன் பின்னால் இருக்கும் பெயரை கேட்டதும் ஆபீசர் அதிர்ச்சி அடைகிறார்." யார் அவர்கள் ? எதற்காக இதில் ஈடுபட்டார்கள் என்பதை கேட்டதும் இன்னும் அதிர்ச்சி அவருக்கு அதிகமாகிறது " இப்படி விறுவிறுப்பாக செல்லும் கதைக்கு ஏ.ஆர்.காமராஜ் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை எழுதி நறுக்கான வசனம் தீட்டி தனது ஏ.ஆர்.கே.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து  ஸ்பெஷல் ஆபீசர் வேடமேற்று அருமையாக இயக்கி உள்ளார். சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ் ,  சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ, இன்னும் பலர் நடித்துள்ளனர். கோவை, பொள்ளாச்சி, கோபி, உடுமலை, ஊட்டி ஆகிய ஊர்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெறாத இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. டேவிட் - கோகுல் இருவரும் ஒளிப்பதிவையும், ஹரிபிரசாத் படத்தொகுப்பையும், ஜாக் வாரியர் இசையையும் கவனித்துள்ளனர். திரையரங்குகள் திறந்ததும்  திரையிட தயாரிப்பாளரும் இயக்குனர...

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க கேயார் கோரிக்கை

Image
எஸ்பிபி மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை: எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார். எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட. நன்றி கேயார் 27-09-2020

விஷாலை போல் அதிரடி காட்ட விரும்பும் அறிமுக நாயகன் ஹரிஷ்(Harish)

Image
'குழந்தை' என்ற குறும்படத்தின் மூலம் இணையத்தில் உலாவும் இளைய தலைமுறையினரை கவர்ந்திருப்பவர் நடிகர் ஹரிஷ். இவர் தற்போது தயாராக இருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.  விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக இயக்குனரின் வேண்டுகோளை ஏற்று உடற்பயிற்சி, நடனம், சண்டை காட்சி ஆகியவற்றில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார். இவரை சந்தித்து கொரோனா சூழலில் தமிழ் திரை உலகில் அறிமுகமாவது குறித்து கேட்டபோது,'' தமிழ் திரை உலகில் நடிகனாக வேண்டும் என்பது என்னுடைய பால்ய காலத்து கனவு. பள்ளிக்கு செல்லும் காலகட்டத்தில் பள்ளிகளுக்கிடையே  நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பரிசுகளை வாங்கியிருக்கிறேன்.  யாரையும் எளிதில் கவர்ந்து விடும் தோற்றப்பொலிவு இருந்ததால், என்னுடைய நண்பர்களும், உறவினர்களும்,' உன்னால் திரைத்துறையில் சாதிக்க இயலும். செங்கல்பட்டில் பிறந்த நீ சாதனையாளராக உயர்வாய்' என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய உந்துதலால் நான் தொடர்ச்சியாக திரைப்படங்களை பார்ப்பதும், நடிப்பில் என்னை ம...

ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதை “வெற்றி”

Image
ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்‌ஷன் படத்தை  இயக்கவுள்ளார். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி  நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது.... இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது மனதிற்கு நெருக்கமானது, மிகவும் உணர்வுப்பூர்வமானது. இது, ஒரு இளைஞன் வாழ்வின் அனைத்து இடர்களுடனும் போராடி தனது தாயின் ஆசையை நிறைவேற்றும் கதையாகும். வெற்றி என்பது நாயக கதாப்பாத்திரத்தின் பெயர் மட்டுமே அல்ல, அது ஒரு...

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் “குருதி ஆட்டம்” இறுதி கட்ட பணிகளில்

Image
2000 ஆம் ஆண்டு முதல், இருபது ஆண்டுகளாக ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் அவர்களின் இந்த திரைப்பயணம் பெரும் வெற்றி சரித்திரம். இதுவரை தமிழ்நாடு முழுதுமாக 148 படங்களுக்கும் மேலாக விநியோகம் செய்துள்ளார் அதில் உச்ச நட்சத்திரங்கள் அஜித்குமார், விஜய், தனுஷ், மற்றும் பலரின் படங்களும் அடங்கும். இந்நிறுவனம் மூலம் முதல் முறையாக திரை உரிமையை பெற்ற ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு” திரைப்படம் பிரமிப்பு தரும் வெற்றியை பெற்று பெரும் லாபத்தை தந்தது. இந்த வெற்றி பயணம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த “ மேயாத மான்” படத்திலும் தொடர்ந்தது. 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள உச்ச நட்சத்திரத்துடன் “வீரம், விவேகம்” படத்திலும் இணைந்தது. மேலும் “ஆடை, மகாமுனி, கொலைகாரன், கோமாளி, சிந்துபாத், அசுரன், பெட்ரோமாக்ஸ் மற்றும் நான் சிரித்தால்” என பல வெற்றிபடங்களை மட்டுமல்லாது விமர்சகர்களும் பாராட்டிய பல படங்களை தொடர்ந்து தந்த 2019 ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ரசிகர்...

அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

Image
மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12   பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன் ,  நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200   க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது  Breathe: Into The Shadows  அசல் தொடரை ,  மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம். சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் ,  தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ,  ஸ்டாண்ட்-அப் காமெடி ,  அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங் ,  அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல் ,  இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி ,  முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி ,  பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ள...

Roposo welcomes Alisha Abdulla, India’s first female racing champion to the Roposo Pride of India program

Image
Roposo welcomes Alisha Abdulla, India’s first female racing champion to the Roposo Pride of India program Roposo, India’s No. 1 short video app welcomes Alisha Abdullah under the highly successful 'Roposo Pride of India' program. The program recognizes remarkable Indians by providing them with a platform to mentor and inspire fellow Indians. Alisha, India’s first female national racing champion truly embodies the characteristics of a legend of a champion, on and off the racetrack. India is a land of many talents. Many Indians have made it big in their chosen field and many more are waiting to be discovered. Roposo believes that each of us has an innate talent that needs a bit of inspiration and a platform to shine.      The Roposo Pride of India was launched in July 2020 with Babita Phogat, Neel Ghose, Sangram Singh & Shooter Dadi has already garnered over 50 Lakh video views. In continuation of the program, Alisha Abdullah will be sharing v...

கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார் – நடிகர் ராஜ்கிரண்

Image
  எஸ்.பி.பாலசுப்ரமணியன் அண்ணன், கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார்… ஆகஸ்டு மாசம் 5 ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று, ஒரு காணொளி வெளியிட்டார். அதில், “மிக மிக சிறிய அளவிலான தொற்று தான். வீட்டிலேயே தனிமையில் இருந்தாலே சரியாகிவிடும். ஆனாலும், என் குடும்பத்தினருக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதால் தான், மருத்துவ மனைக்கு வந்து விட்டேன், வெகு சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்று, மிகுந்த நம்பிக்கையோடும், தெளிவாகவும் பேசியிருந்தார்… ஆனால் இன்று…அவர் நம்முடன் இல்லை… இந்த இழப்பை தாங்க முடியவில்லை. அண்ணனின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன்… – நடிகர் ராஜ்கிரண்

மரணத்தை முன்கூட்டியே கணித்திருந்தாரோ ? ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி .

Image
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. பெற்றோருக்கு சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுத்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அதன் பின்னர் தன்னுடைய சிலை ஒன்றையும் செய்து தருமாறு சிற்பி ராஜ்குமாரிடம் கூறியுள்ளார். ஊரடங்கு காரணமாக சிலைக்கு போட்டோஷூட் கொடுக்க வர முடியாது எனக்கூறி, தனது புகைப்படங்கள் சிலவற்றையும் சிற்பிக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது, சிலை செய்து முடிக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகளை சிற்பி செய்து வரும் நிலையில், எஸ்.பி.பி.யின் இறுதி பயணமே நடந்து விட்டது. தனது மரணத்தையும் முன்கூட்டியே உணர்ந்து சிலைக்கு எஸ்.பி.பி. ஆர்டர் கொடுத்திருந்தாரா என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர்

Image
பின்னணி பாடகர் எஸ்பிபி மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளப் பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்கும் 14 வது படத்தை செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிக்கிறார் .இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார் .இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார்.  இசை - நிவாஸ்  கே பிரசன்னா.  நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் ஆன்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் எஸ் பி பி யின் உருவப்படத்திற்கு மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் . கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார் - நடிகர் ராஜ்கிரண்

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி - பாரதிராஜா

Image
பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி அறிக்கை - பாரதிராஜா. தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரம ணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார் ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000 அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு இந்திய அரசின் உயரிய விரு துகளான பத்மஸ்ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை பெற்ற இசை மேதை அவர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவரிடம் இருந்த மாபெரும் சொத்து அவருடைய மனிதநேயம் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை எந்த இந்தியனும் ஒரு பாடகராக மட்டும் பார்த்ததில்லை இந்தியாவின் பெருமைக்குரிய விலைமதிப்பில்லாத சொத்தாகத் தான் பார்த்தார்கள் தமிழ் சினிமா உலகிற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்பி பால சுப்பிரமணியம் தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்கள் ஆன கலைஞர் எம்ஜிஆர் என் டி ராமாராவ் ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றுகின்ற...

முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது - Simbu

Image
எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன். சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க... காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள... உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர். என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது. அதைப்போல... "காதல் அழிவதில்லை" படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் "இவன்தான் நாயகன்" என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் "இவன் தான் நாயகன்" என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சா...

Shri Shri Ravishankar gets candid about his spiritual journey with Rangaraj Pandey on Sinthanaigal Simplified

Image
  ~ Tune into COLORS Tamil on Sunday, 27th  September 2020 at 11:00 AM to watch the conversation unravel ~ Chennai, 25 th  September 2020:  Filled with interesting anecdotes, watch Shri Shri Ravishankar unravel the finer details of his spiritual journey in a soulful conversation with journalist-actor Rangaraj Pandey on this week’s episode of COLORS Tamil’s Sinthanaigal Simplified. Ranging from spirituality to everyday hurdles, this week’s episode is filled with thought-provoking conversations. As Rangaraj Pandey picks Guurdev’s brain on balancing emotions and pragmatic thinking, we give you three reasons to tune into COLORS Tamil this Sunday, 27 th September 2020 at 11:00 AM.  Beginning of a journey:  With Gurudev sharing fascinating stories from his childhood days about his spiritual awakening, Rangaraj Pandey questions him on the various challenges he had faced as he set upon hisspiritual journey. As Gurudev ca...

நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக 56 நாட்களிலேயே முடிக்கப்பட்டது - ஹேமந்த் மதுகர்

Image
பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும்  வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார். “முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும்  முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில்  தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகிர்ந்து கொண்டார்.   செவித்திறன் குறைந்த மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். போலிஸ்  இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து, பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை...