Posts

லண்டனில் தொடங்கிய த்ரிஷா – ராதிகா – அபர்ணா பாலமுரளி இணையும் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் படப்பிடிப்பு

Image
நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்முறையாக ஒன்றிணையும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் இந்த உளவியல் திகில் (Psychological Thriller) திரைப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் இணைந்து தயாரிக்கின்றன. இது பனோரமா ஸ்டுடியோஸின் முதல் தமிழ் தயாரிப்பாகும்.லண்டனில் தொடங்கிய த்ரிஷா – ராதிகா – அபர்ணா பாலமுரளி இணையும் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் படப்பிடிப்பு! நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய தமிழ் உளவியல் திகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இது பனோரமா ஸ்டுடியோஸின் முதல் தமிழ் தயாரிப்பாகும். 'ஏர்லிஃப்ட்', 'செஃப்', 'பிப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன், இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவிலும், சைக்கலாஜிக்கல் திரில்...

துல்கர் சல்மானின் “I Am Game” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா

Image
துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது. படம் வெளியாகவுள்ள ஒவ்வொரு மொழியிலும் தீவிரமான விளம்பரப் பணிகளை படக்குழு உற்சாகமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், “I Am Game” படத்தின் தமிழ் பதிப்பை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தை உற்சாகமாக விளம்பரப்படுத்தினர். இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு “I Am Game” திரைப்படம் குறித்தும், படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில்.. நடிகர் கதிர் பேசுகையில்.., “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். டிரெய்லரில் நீங்கள் ப...

வி ஜி சினி புரோடஷ்சன் நா வெங்கடேசன் தயாரிப்பில், எஸ் ஆர் மணிகண்டன் இயக்கும் விசாரணை கைதி

Image
வி ஜி சினி புரோடஷ்சன் நா வெங்கடேசன் தயாரிககும் படம் தான் விசாரணை கைதி. கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் எஸ் ஆர் மணிகண்டன், கதாநாயகன் உன்னி கிருஷ்ணன், கதாநாயகி வைஷ்ணவி, முக்கிய கதாபாத்திரத்தில் கூல் சுரேஷ் இந்தப் படத்திற்கு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விகடன் ரித்விகாஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கேமராமேன் சந்திரன் சாமி. இசை அமைப்பாளர் நரேஷ் பைட் மாஸ்டர் அசால்ட் மதுர இந்தப் படத்தில் நடித்த எல்லா கலைஞர்களும் பணிபுரிந்த எல்லா டெக்னீஷும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள் இந்த படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. டைரக்டர் சொல்ல வருவது இந்த விசாரணை கைதி என்ற ஒரு கதையைக் கொண்டு எத்தனையோ தயாரிப்பாளரை சந்தித்தேன் கடைசியில் என் கதையைக் கேட்டு  ரொம்ப நல்லா இருக்கு இந்த கதை என்று சொன்னவர் நா வெங்கடேசன் தயாரிப்பாளர் உடனே சூட்டிங் வேலைகளை தொடங்குங்க என்று சொல்லி எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்.  இந்தப் படத்திற்கு கதாநாயகன் கதாநாயகி மற்றும் கேரக்டர் ஆர்டிஸ்ட் எல்லாம் மிகச் சிறப்பாக  தேர்வு செய்து இந்தப் படத்தை எப்படி எல்லாம் ஷூட் பண்ணலாம் என்று நல்ல...

‘விடியும் காத்திரு’… எம்.எஸ். பாஸ்கர் நடிக்கும் புதிய க்ரைம் திரில்லர்

Image
எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக...

40 நாட்களில் சாதித்த ‘தகப்பன்’ படக்குழு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு !

Image
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்.., படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ...

செப்டம்பர் 4-ல் தமிழுக்கு வரும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழ் டிரெய்லர் வெளியீடு!

Image
சமீபத்தில் வெளியாகி மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு மிடில் ஏஜ் ஆணுக்கும், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலின் பல்வேறு முகங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்வதாக டிரெய்லர் உணர்த்துகிறது. வயது வித்தியாசம் கொண்ட இருவருக்கிடையேயான ஈர்ப்பு, காதல், அதனால் ஏற்படும் குழப்பங்கள், உணர்வுகள் மற்றும் சமூகத்தைச் சுற்றிய பார்வைகள் என பல அம்சங்களை டிரெய்லர் சுவாரஸ்யமாக முன்வைக்கிறது. குறிப்பாக, வழக்கமான காதல் கதையிலிருந்து சற்று மாறுபட்ட ஒரு உறவை மையப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் இணைத்து இப்படம் உருவாகியிருப்பது டிரெய்லரில் தெரிய வருகிறது. டிரெய்லரைப் பார்த்தவுடனேயே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. இப்படத்தை கிரிஷ்...

ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் 'கிங் 100- KING 100 ' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

Image
'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் 'கிங் 100 - KING 100' திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. 'உதயம்' , 'இதயத்தை திருடாதே', 'தோழா' 'குபேரா', 'கூலி' திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா... அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்ட...