எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ - நடிகர் ராதாரவி
எஸ்பிபி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ! நடிகர் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம்!
டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு குழு 30.09.2020 அன்று தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடி, திரு எஸ்பிபி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.
Comments
Post a Comment