நிசப்தம் திரைப்படத்தில் ர.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இடையிலான பொருத்தத்தைப் பாராட்டும் இயக்குனர் ஹேமந்த் மதுகர்
அவர், “ஆரம்பத்தில், அவர்கள் முன்பு ஒரு படம் செய்தார்கள், 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு ஊமையாக இருக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தையும், இசைக்கலைஞராக நடிக்கும் மாதவனின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான உற்சாகத்தைப் பார்த்தபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஒருவர் அழகானவர், மற்றவர் கியூட்டானவர், ஒன்றாக அவர்களது பல்திறன் நடிப்பும் இணைய, அவர்களிடையே திரையில் காணப்பட்ட பொருத்தம் மிகவும் அற்புதமான இருந்தது. நாங்கள் பொதுவாக ஒன்றாக வேலை செய்யாத நடிகர்களுடன் பணிபுரியும் போது, அவர்களை இயக்குவது ஒரு சவாலாக இருக்கும். ஆனால், அனுஷ்கா மற்றும் மாதவன் இடையில் இந்த பொருத்தம் இயற்கையாகவே இருந்தது மற்றும் நான் எதிர்பார்த்ததை விட அது ஆச்சரியமாக இருந்தது” என்றும் கூறினார்.
முன்னணி கதாபாத்திரங்களின் நடிப்பைப் பற்றி மேலும் வெளிப்படுத்திய ஹேமந்த், தயாரிப்பாளர் கோனா வெங்கட் அவர்களின் சமீபத்திய விமான பயணத்தின் போது படத்தில் சாக்ஷியின் கதாபாத்திரத்திற்காக அனுஷ்காவை இறுதி செய்ததாக குறிப்பிட்டார். அவர், “ஆரம்பத்தில், சாக்ஷியின் கதாபாத்திரத்திற்காக என் மனதில் வேறு ஒருவர் இருந்தார். இருப்பினும், கோனா வெங்கட் தனது விமான பயணத்தின்போது அனுஷ்காவை சந்தித்தார், மேலும் அந்தக் கதாபாத்திரத்தை எழுதுவதற்கு அவளை விட சிறந்த தேர்வு இருக்க முடியாது என்று உறுதியாக நம்பினார். அனுஷ்காவையும் மாதவனையும் மீண்டும் ஒன்றிணைத்து இந்த அற்புதமான தலைசிறந்த படைப்பை உருவாக்கியதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என்றும் கூறினார்.
நிசப்தம் என்பது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சாக்ஷி என்னும் ஒரு திறமையான கலைஞரின் கதையாகும். அவர் ஒரு வில்லாவில் நிகழும் ஒரு சோகமான சம்பவத்திற்கு, எதிர்பாராத விதமாக சாட்சியம் அளிக்கும்போது குற்றவியல் விசாரணையில் சிக்கித் தவிக்கிறார். போலீஸ் துப்பறியும் குழுவினர் வழக்கின் அடி ஆழம் வரை விசாரிக்க, ஒரு பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேகத்திற்கிடமான நபர்களின் பட்டியல் உருவாகிறது. நிசப்தம் நிச்சயம் உங்களை இருக்கையின் நுணிக்கு வரவழைக்கும் த்ரில்லராக, பார்வையாளர்களை கடைசி வரை யூகிக்க வைக்கும் முடிவினைக் கொண்டதாகவும் இருக்கும்.
ஹேமந்த் மதுகர் அவர்களால் இயக்கப்பட்டுள்ள நிசப்தம் திரைபடத்தை, TG விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார் மற்றும் அனுஷ்கா ஷெட்டி, ர மாதவன் மற்றும் அஞ்சலி உள்ளிட்ட பல அற்புதமான நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் அமெரிக்க நடிகர் மைக்கேல் மேட்சன் தனது இந்திய திரைப்பட அறிமுகத்தை மேற்கொள்கிறார். மேலும் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் சீனிவாஸ் அவசரலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இந்த தெலுங்கு த்ரில்லர் நிசப்தம் (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற தலைப்பில்) திரைப்படத்தை, அக்டோபர் 2 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யலாம்.
Comments
Post a Comment