நடிகர் சுசாந்த் சிங் மரணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் நிபுணர் குழு சிபிஐயிடம் தாக்கல்
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான ஆய்வு அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் தடயவியல் நிபுணர் குழு, சிபியையிடம் வழங்கியது.
சுசாந்தின் மரணம் குறித்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 40 நாட்களில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ யின் வேண்டுகோளின் படி டாக்டர் சுதிர் குப்தாவின் தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர், சுசாந்தின் உடற்கூறு மற்றும் குடல் பரிசோதனை அறிக்கைகளை மறுஆய்வு செய்தனர்.
சுசாந்தின் குடலில் விஷம் காணப்பட்டதா என்ற கோணத்திலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய அறிக்கையை பரிசீலித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாக வைத்து வழக்கை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment