தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சி - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை துவங்கியிருக்கிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அணியும் கவச உடையை அமைச்சர் விஜயபாஸ்கர் அணிந்து இருந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
மருத்துவர்கள் கவச உடை அணிவதன் சிரமத்தை இன்று நான் உணர்ந்துகொண்டேன். கவச உடை அணிந்து பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு தலைவணங்குகிறேன்.
நோய் தொற்றின் வேகத்தை ஓரிரு நாட்களில் கணிக்க முடியாது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியை துவங்கியிருக்கிறோம். என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இந்த சந்திப்பின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் உடன் இருந்தார்
Comments
Post a Comment