தீர்ப்பு என்பதை விட தீர்மானிப்பு என்பதே சரி-தொல். திருமாவளவன் கருத்து..
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல உள்ளதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மீதான வழக்கில் சம்பந்தப்பட்ட 32 பேருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம் பாபர் மசூதி மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் இல்லாததால் 32 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் எழ தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் ' ஏற்கனவே தீர்மானித்ததையே தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்னும் சந்தேகம் எழுகிறது. இது தீர்ப்பு என்பதைவிட தீர்மானிப்பு என்பதே சரி.
பாபர்மசூதியை இடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் நிராபராதிகளென அவர்களை விடுதலைசெய்த சிபிஐ மீதான நம்பகத்தன்மை தகர்ந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment