‘கபடதாரி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்றான ‘கபடதாரி’ படத்தின் முழு  படப்பிடிப்பும் இன்று நிறைவடைந்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து
ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கபடதாரி’. இவர் வெளியிடும் மற்றும் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு
பெற்று வருவதால், ‘கபடதாரி’ படத்திற்கும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு
முடிவடையாமல் இருந்தது.

தற்போது திரைப்பட படப்பிடிப்புக்கு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்ததையடுத்து, ’கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பும்
தொடங்கப்பட்டு, கடந்த 3 நாட்களில் சென்னைக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது.

அரசு விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றியும், 70-க்கும் குறைவான நபர்களை கொண்டும் இந்த மூன்று நாட்கள் படப்பிடிப்பையும்
‘கபடதாரி’ படக்குழு நடத்தி முடித்துள்ளார்கள். இதில் கதாநாயகன் சிபிராஜ், ஜே.பி உள்ளிட்ட நடிகர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

வரும் நவம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘கபடதாரி’ குழுவினர், திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியான உடன், திரையரங்குகளில் ரிலீஸ் செய்வது குறித்து அறிவிக்க உள்ளார்கள்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளார்கள்.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை கிரேட்டிவ்
எண்டர்டெயின்மெண்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். சைமன் கே கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

Comments

Popular posts from this blog

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது