இம்மானுவேல் அரசர் ஃபிலிம்ஸ் சார்பில்,டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “கள வேட்டை”.

உண்மை சம்பவங்கள் படமாக்கப்பட்டால் சாதாரண சினிமாவை விட ஒரு படி மேலான
எதிர் பார்ப்புகள் அப்படத்திற்கு இருக்கும். அப்படி, தமிழ் நாட்டையே அதிரவைத்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை களத்தை, மக்களுக்கு பிடித்த வகையில் இன்வெஸ்டிகேசன் திரில்லராக உருவாக்கி வருகிறார்கள்.

“கள வேட்டை” திரைப்படம் வெறும் குற்ற விசாரணைக் கதையாக மட்டுமல்லாமல், சமூகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை, முகத்தில் அறைந்து சொல்லும் உண்மைகளை வெளிக்கொணரும் படைப்பாக உருவாகியுள்ளது. உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு வரும் அப்படி ஒரு காவல்துறை அதிகாரியாக டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலைஅரசர் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.

சமீபத்தில் நடிகை தன்ஷிகா நடிப்பில் வெளியான ‘யோகிடா’ என்ற அதிரடி ஆக்‌ஷன் படத்தை இயக்கி பாராட்டு பெற்ற கௌதம் கிருஷ்ணா, இப்படத்தை இன்னொரு வித்தியாச திரில்லர் ஜானரில் இயக்கி வருகிறார். உண்மை சம்பவங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் பல அதிர்ச்சி தகவல்களை ஆராய்ந்து, பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு செல்லும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.

இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்த நடிகை நைகா ஷானு நடித்துள்ளார். இவர்களுடன் மூத்த நடிகர்கள் இளவரசு, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரும் பல திறமையான புதுமுக நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

சம்பவத்தின் உண்மைத் தன்மையை திரையில் தத்ரூபமாகப் பதிவு செய்யும் நோக்கில், பல ஹிட் படங்களுக்கு உதவியாக அமைந்த கன்னியாகுமரி மாவாட்டம், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பக் குழுவில், திரௌபதி 2 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஃபிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ திரைப்படப் புகழ் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, ஆர்.கே. வினோத் கண்ணா படத்தொகுப்பாளராக பணியாற்ற, ஆர்.மனோகர், கலை இயக்குநராக பணிபுரிய, ஆர்.மனோகர் இந்திய திரையுலகின் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநர்களில் ஒருவரான சூப்பர் சுப்பராயன் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். புரொடக்‌ஷன் கண்ட்ரோலராக த.நிர்மல் கண்ணன் கவனிக்க, இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை ஜான்சன் செய்துவருகிறார்.

உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் “கள வேட்டை”, அதிர்ச்சி, பரபரப்பு, மர்மம் மற்றும் உண்மையின் தேடலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதால், திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

Comments

Popular posts from this blog

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது