பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை

பெங்களூர் நகரம் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று நிகழ்வை சமீபத்தில் கண்டது. இந்திய சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும்  படைப்புகளில் ஒன்றாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படத்தின் மையமாக திகழும் நடிகர்  யாஷ் உடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் பெங்களூர் மெட்ரோவை முழுமையாக ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்ட மேடையாக மாற்றியுள்ளனர்.

வரும் ஜனவரி 8 அன்று நடிகர்  யாஷ்  பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில்,  நகரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பெங்களூர் மெட்ரோ, முதன்முறையாக ஒரு நடிகருக்கான பிறந்த நாள் களமாக மாறியது. வழக்கமான பயணமாகத் தொடங்கிய ஒரு மெட்ரோ பயணம், அந்த நாளில் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறி, ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 மெட்ரோ பெங்களூர் நகரத்தின் மையப்குதிகளைக்  கடந்து செல்லும் போது, அது வெறும் பயணிகளை மட்டுமல்ல — உணர்ச்சி, பெருமை மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நேசத்தையும் எடுத்துச் சென்றது. திரையரங்குகளைத் தாண்டி, சமூக-கலாச்சார அடையாளமாக யாஷ் இன்று உருவெடுத்திருப்பதற்கான உறுதியான சான்றாக இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வின் நேரம் மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில் நடிகைகள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகியதிலிருந்து, யாஷின் அடுத்த சினிமா பயணம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்படத்தில் யாஷின் தோற்றம் குறித்த சில வலுவான புகைப்படங்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், அவர் ஏற்கும் கதாபாத்திரத்தின் முழுமையான  தன்மை இன்னும் மர்மமாகவே உள்ளது. அந்த மர்மமே ரசிகர்களிடையே தீவிரமான ஊகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

நடிகர் யாஷின் பிறந்தநாளில் அந்த பெரும் கதாபாத்திரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மிகப் பெரிய அளவில் உருவாகும் இந்த திரைப்படம், ஒரு வரலாற்று காலகட்டப் பின்னணியுடன், தீவிரமும் ஆழமும் நிறைந்த உலகை நமக்கு வாக்குறுதி அளிக்கிறது. நெறிமுறைகளின் எல்லையில் நிற்கும் ஒரு சிக்கலான நாயகன் — அவன் யார்? என்பதை வெளிப்படும் அந்த  தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது