பைசன் படம் வெற்றியை படத்தில் பணியாற்றிய ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

கிடாக்கறி விருந்து வைத்து பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களோடு கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்க்கத்தில் துருவ், அனுபமா, ரெஜிஷா, அமீர் நடிப்பில் வெளியான பைசன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு பிடித்த படமாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் லாபகரமான படமாகவும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தின் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் படக்குழுவினர் நடத்தினார்கள்.

அதனை தொடர்ந்து இந்த படம்  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்றது உதவிய, பணியாற்றிய விளையாட்டுவீரர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலியில் இயக்குனர் மாரிசெல்வராஜ் கலந்துகொண்டு
கிடா விருந்து உபசரிப்போடு , ஊர்மக்களோடு  படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

மாரிசெல்வராஜின் படங்களில் தனது ஊர் மற்றும் கிராமத்து அசல் மனிதர்களை தனது திரைக்குள் கொண்டுவருவதை  வழக்கமாகக்கொண்டுள்ளர். அந்த வகையில் பைசனின் வெற்றியை இந்த அசல் மனிதர்களோடு கொண்டாடியுள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிட்டுள்ள பதிவில்

"பைசன் (காளமாடன்)படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள் ,தங்கைகள், தம்பிகள்,  நண்பர்கள் அனைவரையும் நேரில் போய் சந்தித்து பைசனுக்கு கிடைத்த இந்த வெற்றியையும் என் இதயம் நிரம்பிய நன்றியையும் அன்பையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். 
பைசன் காளமாடனின் இந்த அத்துமீறிய வெற்றி இந்த மனிதர்களாலே சாத்தியமானது. 

என்று தன் நன்றியை தெரிவித்துள்ளர் இயக்குனர் மாரிசெல்வராஜ்.

Comments

Popular posts from this blog

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது