"எதிரெதிர் துருவங்களை இணைக்கும் #Love"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி


திறமையான இளம் ஸ்டார்ட்டப் நிறுவனரான தாராவின் பயணம் மென்மையான அதேசமயம் துணிச்சலான முதலீட்டாளரான மேத்யூவுடன் இணையும்போது இன்னும் வலுவடைகிறது. நம்பிக்கை அடிப்படையிலான டேட்டிங் செயலியை தாரா ஆதரிக்கும் அதே வேளையில், கெமிஸ்ட்ரி அடிப்படையிலான ஒரு டேட்டிங் செயலியை மேத்யூ ஆதரிக்கிறார். இந்த விவாதத்தை தீர்த்து வைக்க அவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் தமிழ் சீரிஸாக பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கிறது #Love. 

இதுகுறித்து இயக்குநர் பாலாஜி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "எதிரெதிர் துருவம் ஈர்க்கும் என்பது காலங்காலமாக காதலின் எழுதப்படாத விதி. ஆனால், இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் மற்றும் டேட்டிங் செயலிகளில் அது எப்படி மாறியிருக்கிறது என்பதை புதிய திருப்பத்துடன் சொல்லி இருக்கிறோம். இன்றைய டேட்டிங் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்தக் கதை, காதல் பற்றிய காலத்தால் அழியாத கேள்விகளை ஆராய்கிறது. நெட்ஃபிலிக்ஸ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மே6 என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியது இன்றைய பார்வையாளர்களுக்கு இந்த அழகான கதையை கொண்டு சேர்ப்பதற்கான சுதந்திரத்தைக் கொடுத்தது. கணிக்க முடியாத காதலை ஆழமான மனித உணர்வுகளுடன் பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாட காத்திருக்கிறோம்" என்றார். 

நடிகர் அர்ஜூன் தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது. ஒரு டேட்டிங் செயலியைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஐடி ஸ்டார்ட்டப்பின் துடிப்பான பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, டிஜிட்டல் யுகத்தில் உண்மையான இணைப்பைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்களை பேசுகிறது. என் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தக் கதையையும் என் கதாபாத்திரத்தையும் நிச்சயம் பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நெட்ஃபிலிக்ஸ், சௌந்தர்யா ரஜினிகாந்த், பாலாஜி மோகன் மற்றும் முழு குழுவுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது” என்றார். 

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, "ஸ்வைப்ஸ், மேட்ச் மற்றும் உடனடி செய்திகளின் யுகத்தில், #Love இரண்டு எதிரெதிர்கள் துருவத்தை சேர்ந்தவர்களை சந்திக்க வைக்கிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எவ்வாறு தடுமாறுகின்றனர் என்பதையும், வேகமான உலகில் எதிர்பாராத பிணைப்புகள் எவ்வாறு உருவாகலாம் என்பதையும் ஆராய்கிறது. இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் அவரது இயக்குநர் குழு, ஒளிப்பதிவாளர் ஹரிஷ், சக நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அர்ஜுன் சிதம்பரம், ஹரிணி, கிரண், ஸ்டைலிஸ்ட் பல்லவி ஆகியோருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர்" என்றார். 

*நடிகர்கள்:* அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி

இயக்குநர்: பாலாஜி மோகன்,
தயாரிப்பாளர்: சௌந்தர்யா ரஜினிகாந்த்,
தயாரிப்பு: மே6 எண்டர்டெயின்மெண்ட்

Comments

Popular posts from this blog

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers