துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது


துல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன்  - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வரலாற்றில் வித்தியாசமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே Wayfarer Films மாறியுள்ளது. இதற்கு முன் பல சிறந்த படங்களை மலையாள ரசிகர்களுக்குக் கொடுத்திருந்தாலும், “லோகா” மூலம் இந்த  பேனர் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. துல்கர் சல்மான் எடுத்த துணிச்சலான இந்த முயற்சி, இந்திய சினிமாவின் வரலாற்றில்  திருப்புமுனையாக  அமைந்துள்ளது. நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் துல்கரின் பங்களிப்பு லோகா மூலம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி கொடுத்த காட்சிகள், இது உண்மையிலேயே ஒரு மலையாளப் படமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு உலகத் தரத்தில் இருக்கின்றன. புரடக்சன் டிசைனர் பங்களன் ( Banglan) மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் (Jithu Sebastian)  சேர்ந்து இந்த படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) , தனது பின்னணி இசையின் மூலம் ரிதம், திரில் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வழங்கியுள்ளார். சாமன் சகோவின் கூர்மையான எடிட்டிங் மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

கேரளாவிலும், சர்வதேச அளவிலும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் தரப்பிலும் வலுவாகச் செல்கிறது. முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் தனது சிறப்பான நடிப்புக்காக பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பன்முகப்படுத்தப்பட்ட சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகமாக வெளிவந்துள்ள லோகா, ரசிகர்களின் இதயத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டது.

எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்

Comments

Popular posts from this blog

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது