'இங்கு மிருகங்கள் வாழும் இடம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 

'இங்கு மிருகங்கள் வாழும் இடம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஏப்ரல் 16; 2024 செவ்வாயன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பைஜான், சிறு முதலீட்டுப் பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர் கே அன்புச் செல்வன், பட விநியோகஸ்தர் 'ஆக்சன் ரியாக்சன்' ஜெனிஷ், ஸ்டன்ட் மாஸ்டர் 'இடிமின்னல்' இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்சார் போர்டை கடுமையாக சாடிய தயாரிப்பாளர்
விழாவில் பேசிய தயாரிப்பாளர் பைன்ஜான் அவர்கள் "சென்சார் போர்டு எங்களுக்கு A சர்டிபிகேட் கொடுத்து விட்டது. இயக்குனர் கேமரா மேன் என்னை ஏமாற்றிவிட்டார். பலவித இன்னல்களுக்கு பிறகு நான் இந்த படத்தை வெளியிட வந்திருக்கிறேன் பத்திரிக்கை தொலைக்காட்சி நண்பர்கள் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்று கூறினார்.


சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் சன் டிவி ஓனர் கலாநிதி மாறன் அவர்கள் பெயிண்ட் பாக்கி 5000 ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது அது உங்களுக்கு யாருக்காவது தெரியுமா. அவர் நினைத்தால் இன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 எம்எல்ஏக்களையும் விலைக்கு வாங்கி முதலமைச்சராக முடியும் உழைப்பால் உயர்ந்தவர் கலாநிதிமாறன்.அதேபோல் இந்த படத்தின் தயாரிப்பாளர் பைன்ஜான் அவர்கள் உழைப்பால் உயர்ந்தவர் பல பேரிடம் ஏமாந்தாலும் படத்தை வெளியிட்டு வெற்றி பெறுவேன் என்று உறுதியாக இருக்கிறார் என்று கூறினார்.

Stunt மாஸ்டர் இடி மின்னல் இளங்கோ அவர்கள்
படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான பைன் ஜான் அவர்கள் குப்பை மேட்டில் உருண்டு புரண்டு சண்டைக்காட்சி-க்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சண்டைக்காட்சி முடிந்தவுடன் ஒரு வாரத்திற்கு சாப்பிடாமல் இருந்தார் தயாரிப்பாளர் என்று கூறினார். இங்கு மிருகங்கள் வாழும் இடம் திரைப்படம் ஏப்ரல் 26 தமிழ்நாடு முழுவதும் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் அவர்கள் வெளியிடுகிறார்.

Comments

Popular posts from this blog

பெர்ஃபிட்-ஆர் முழங்கால் அமைப்பு மொத்த முழங்கால் மாற்று சிகிச்சையில் புரட்சி 

மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் நின்னு விளையாடு

எஸ்.ஏ.இ. இந்தியா நடத்தும் சர்வதேச போக்குவரத்து மின்மயமாக்கல் சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கியது