“நட்டி” கதாநாயகனாக நடிக்கும் இன்ஃபினிட்டி

 

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் மற்றும் ழகரலயா ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இன்ஃபினிட்டி என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைபடத்தில் “நட்டி” கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகிக்கொண்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். நட்டி அவர்கள் புதுவிதமான தோற்றத்தில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. உடன் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் இரண்டாம் கட்ட பட பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரப்பரப்பாக நடந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மென்பனி புரோடக்‌ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இசை : டாம் ஜோ
ஒளிப்பதிவாளர் : விஷ்ணு கே ராஜா
படத்தொகுப்பு : எஸ்.என். ஃபாசில்
ஸ்டண்ட் : சில்வா

Comments

Popular posts from this blog

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது