திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்!

ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகை கடை அதிபர் ஜெயந்திலால் சலானி என்பவர் பாண்டியன் கொண்டை என்ற மூன்று கிலோ தங்கத்தினால் ஆன கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார்.இதில் தங்கம் மட்டுமல்லாது வைரம் மரகதம் உள்ளிட்ட ஒன்பது வகையான விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 11 மாதங்களாக தனது நகை பட்டறையில் இதனை வடிவமைத்துள்ளார் ஜெயந்திலால். இதையடுத்து இன்று காலை தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்து உற்சவருக்கு சமர்ப்பித்து வழிபாடு செய்தார்.பாண்டியன் கொண்டை என்பது ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதருக்கு பாண்டிய மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கிரீடத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளார். அதன் பின்னர் முதல் முறையாக இவ்வளவு விலை உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Comments

Popular posts from this blog

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது