தானாகவே உயர்ந்தவரை இது போல அசிங்கப்படுத்தியது தவறு - மீரா மிதுன்
நடிகர் அஜித்தை எந்த பிரச்சனைக்கும் வெளியே வராதவர் என கிண்டலடித்து டிசைன் வெளியிட்டது சமீபத்தில் பிரபலமான பத்திரிகை ஒன்று. அதில்.. வெளியே வர மாட்டேன் போடா என்ற டி சர்ட்டை அஜித் போட்டு இருப்பது போல டிசைன் செய்திருந்தனர்.
இதனால் தல ரசிகர்கள் டென்ஷனாகி அந்த பத்திரிகையை கேவனமான வார்த்தைகளால் ட்ரெண்டாக்கி ட்விட்டரில் வறுத்தெடுத்தனர்.
இந்த் டிரெண்ட் குறித்து மாடலும் நடிகையுமான மீரா மிதுன் கூறியுள்ளதாவது.. அஜித் எந்த வம்புக்கும் போகாதவர்.. விஜய் போல வீரராக இசை வெளியீட்டில் பேசிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்பவர் இல்லை.
தானாகவே உயர்ந்தவரை இது போல அசிங்கப்படுத்தியது தவறு. அஜித் அவர்கள் அவதூறு வழக்கு தொடுக்கும் நேரம் இது. என பதிவிட்டுள்ளார் மீரா மிதுன்.
Comments
Post a Comment