சிறுமி பலாத்காரம்; வாலிபர் கைது
செங்குன்றம் அடுத்த தீயம்பாக்கம் பெரியார் நகர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரோகித்(23). இவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரோகித் சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதனால் ரோகித் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment