முதியவரிடம் செல்போன் பறிப்பு

சோழவரம் ஆங்காடு ஊராட்சி சிறுணியம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (65). இவர் நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினார். புழல் மத்திய சிறைச்சாலை அருகே சிக்னலுக்காக நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் குப்புசாமியின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக, குப்புசாமி புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது