Posts

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Image
எம்.ஜி. ஸ்டூடியோஸ் ஏ.பி.வி. மாறன், கணேஷ் கே. பாபு மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கே. செந்தில் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 'டாடா' புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நட...

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி... ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்

Image
காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80...

விஷால் அறிமுக இயக்குனராகவும், நடிப்பில் சிகரமாகவும்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பெரும் மகுடங்களை சூடும் மகுடம் டீசர்

Image
திரைத்துறையின் மீது தனக்குள்ள காதல், அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் என தனது பங்களிப்பை நடிப்பு மற்றும் இயக்கத்தின் வாயிலாக மகுடம் திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் விஷால். ஆக்சன், எமோஷன் மற்றும் நேர்த்தியான திரைக்கதையை கொண்டு உருவாகியுள்ள மகுடம் திரைப்படமானது தமிழ் திரையுலகின் பெருமைமிகு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99 வது திரைப்படமாகவும் நடிகர் விஷாலின் திரைப்பயணத்தில் 35 வது திரைப்படமாகவும் அமையப் பெற்றிருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வாயிலாக மக்களுக்கு ஓர் ஆழமான ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கலந்த நேர்த்தியான திரைக்கதையுடன் உருவாகி இருக்கும் திரைப்படமாக இது அமையப்பெற்றிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை மாதத்தில் வெளியாக தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் MAKUTAM என்ற தலைப்பில் வெளியாகிறது.  இத்திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயபிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜெய், வி ஜே ஜான்சி, பதம் குமார் மற்று...

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட  டீசர்  வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா   பேசியதாவது: ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங...

வாக்ஸ் குழுமத்தின் வாக்ஸ் விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக 19 ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா

Image
தொடர்ந்து 19 ஆண்டுகளாக பள்ளிக் கல்லூரி மற்றும் மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தாரின் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் தங்களின் அறக்கட்டளையின் சார்பாக, வழங்கப்பட்டு வருவதாக வாக்ஸ் குழுமத்தின் தலைவர் ராவணன் தெரிவித்துள்ளார்.. வாக்ஸ் குழுமத்தின் வாக்ஸ் விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக 19 ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வாக்ஸ் குழுமத் தலைவர் ராவணன் ஞானசுந்தரம் அவர்களின் தலைமையில் குழுமத்தின் இயக்குநர்கள்,கவிதா ராவணன் மற்றும் இந்திரஜித் ராவணன் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற இந்த மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைகள் வழங்கும் விழாவில், வாக்ஸ் அறக்கட்டளையின் சார்பாக 600க்கும் மேற்பட்ட ஆதரவற்ற, பார்வையற்ற பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டது.. இதில் ஓய்வுப்பெற்ற குடிமைப் பணி அதிகாரியும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரின் தனிச் செயலாளருமான ராஜரத்தினம், முன்னாள் ரோட்டரி சங்கத்தின் ஆளுநரும் எமரால்ட் பதிப்பகத்தின் தலைமை நிர்வாக அத...

நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

Image
ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் - தி அரைவல்’ (NOVA) ; Phase One – The Arrival). இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.  ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கர்நாடகாவைச் சேர்ந்த அத்விதி ஷெட்டி, வங்காள நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரைக்கு வரும் விதமாக இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘நோவா’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாயகி ரைசா வில்சன் கூறும்போது, “ஒரு கதைக்குள் இன்னொரு கதை என்கிற விதமாக இந்த ...

விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது

Image
வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலக...