"ஒரு நடிகனாக 'லெகஸி' என்னை குஷிப்படுத்தியது"- நடிகர் மாதவன்
வலுவான குற்றப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த வயதான ஒரு பெரியவர், தனது வலிமைமிக்க சாம்ராஜ்யத்தை தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையில் இருந்து பாதுகாக்க ஒரு வாரிசை நியமிக்கப் போராடுகிறார். அவர் குடும்பத்தையும், தனது சாம்ராஜ்யத்தையும், மிக முக்கியமாக தனது பாரம்பரியத்தையும் காப்பாற்ற போராடுகிறார். நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்ஸாக குடும்ப கேங்ஸ்டர் மற்றும் வாரிசுரிமையை மையமாகக் கொண்டு நகரும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'. ஆர். மாதவன், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்கி இருக்கிறார். இது குறித்து இயக்குநர் சாருகேஷ் சேகர் பகிர்ந்து கொண்டதாவது, "'லெகஸி' எனக்கு மிகவும் பர்சனல். நான் நினைத்ததை கொண்டு வர படைப்பு சுதந்திரம் கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனத்திற்கு நன்றி. மனித உறவுகளின் சிக்கல் மற்றும் உணர்ச்சிகள் குறித்தான கதை எப்போதும் எனக்கு ஆர்வமூட்டும். அதன் அடிப்படையில், கேங்ஸ்டர் உலகின் பின்னணியில் இதை எழுதுவது அதை இன்னும் சுலபமாக இருந்தது. இதற்கு எனது திறமையான குழுவும் முழு ஒத்துழைப்பு கொட...